என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் பண்ணை"

    • சிறுதானிய உணவுப் பொருள்கள் உற்பத்தியைத் தொடங்கினேன்.
    • குழந்தைகளுக்கு உணவை மருந்தாக கொடுக்க மறந்து விட்டோம்.

    குழதைகளுக்கு அடிப்படை உணவுகள் தொடங்கி, சர்க்கரை நோய் குறைபாடுள்ளவர்கள் வரை தரமான, ஆரோக்கியமான உணவுகளை மதிப்புக்கூட்டல் மூலமாக தயாரித்து கோடிகளில் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்கிறார் மதுரை தனா ஃபுட் பிராடக்ஸ் உரிமையாளர் தனலட்சுமி.

    இதுகுறித்து, நம்மிடம் அவர் கூறியது: "என் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருள்களைத் தர வேண்டும் என்ற தேடுதல் இருந்தது. என் கணவர் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை அதில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக முதல் முயற்சியாக சத்துமாவு கஞ்சி தயாரிப்பைத் தொடங்கினேன். அடுத்ததாக, சிறுதானிய உணவுப் பொருள்கள் உற்பத்தியைத் தொடங்கினேன்.

    இதைத் தொடர்ந்து, நம் முன்னோர்களின் உணவுகளை, உணவு முறையை ஆராய்ந்திட தொடங்கினேன். அதன் பிறகு, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகளில் உணவுப் பொருள்கள் தயாரிப்பை தீவிரமாக மேற்கொண்டோம்.

    ஆரம்ப காலத்திலேயே குழந்தைகளுக்கு நாம் இதுதான் ஆரோக்கியமான உணவு எனத் தர வேண்டும். இந்த விழிப்புணர்வை செயல்படுத்தி, அக்கம் பக்கத்தினருக்கு சிறுதானிய உணவுகளை ஆர்டரின் பேரில் செய்யத் தொடங்கினேன். அதில், குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரிக்கப்பட்ட சிறுதானிய, சத்துப் பொருள்களால் குழந்தைகளின் பெற்றோர்களிடம் இருந்து பாராட்டுகள் வந்தன. இதோடு, இதை நிறுத்தாமல் அதிகப்படியான குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, நஞ்சில்லாத, தரமான உணவு தயாரிக்கும் பணியை விரிவுபடுத்தினேன்.

    என் கணவருக்கு சர்க்கரை நோய் குணமானதால், அவரும், என்னை உற்சாகப்படுத்தினார். அந்த உத்வேகத்தால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான பிரத்யேக சத்துமாவு தயாரித்தோம். ஒரு பாரம்பரிய அரிசி வகையைக் கொண்டு இந்த சத்துமாவு தயாரிக்கப்படுகிறது. சத்துமாவில் தொடங்கிய எங்கள் தயாரிப்புகள், தற்போது 100 வகையான உணவுப் பொருள்களைக் கடந்து விட்டன

    ஆரம்பத்தில் இதை ஒரு வியாபாரமாகக் கொண்டு செல்லும் எண்ணம் இல்லை. நமது தயாரிப்பை மற்றவர்கள் பாராட்டினாலே போதுமானது என்று நினைத்தேன். ஆனால், ஆரோக்கியமான உணவை நிறையப் பேருக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வியாபாரமாகத் தொடர்ந்து வருகிறோம்.

    முதல் 20 ஆண்டுகள் குழந்தைகள் உண்ணும் உணவுகள் தான் அடுத்த 80 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். குழந்தைகளுக்கு உணவை மருந்தாக கொடுக்க மறந்து விட்டோம். அந்த மரபை நாங்கள் மீண்டும் கொண்டு வருகிறோம். சரிவிகித உணவை தரும் போது குறைபாடுகள் இல்லாமல் வாழ முடியும்.

    இந்த தொழில் மனநிறைவை மட்டுமில்லாமல், வருமானத்தையும் கொடுத்தது. இதை வைத்து, அடுத்தடுத்து என் வியாபாரத்தைத் பெருக்கத் தொடங்கினேன்.

    ஆரம்பத்தில் என் பக்கத்து வீட்டில் தொடங்கிய இந்த வணிகம், உள்ளூர், மாவட்டம், வெளி மாநிலம் எனக் கடந்து தற்போது, 8 நாடுகளுக்கு சிறுதானியம் மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை அனுப்பி வருகிறோம். ஆண்டுக்கு ரூ.1.20 கோடிகள் வரை வருமானம் ஈட்ட முடிகிறது.15 பெண் பணியாளர்கள் மூலமாகவே இதை சாத்தியப்படுத்துகிறோம். இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் தரமான, நஞ்சில்லாத உணவு வகைகளை செய்து கொடுப்பது மட்டும் தான்.

    முழு விவரங்கள், ஆலோசனைகளுக்கு வருகின்ற 17.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் "அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா 2.0" கலந்து கொள்ளுங்கள். முன்பதிவுக்கு 83000- 93777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • கலப்பைகள் மற்றும் விசை தெளிப்பான் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.
    • மர எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயிறு வகைகள், தானியங்கள், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், மர எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயிறு வகை திட்டத்தின் கீழ் ஆதார வளங்களை பாதுகாக்கும் தொழில் நுட்பமாக பயிரிடுவதற்கு ஏற்புடையதாக நிலத்தை பண்படுத்த டிராக்டரால் இயக்கக்கூடிய சுழல் கலப்பைகள் மற்றும் விசை தெளிப்பான் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி காங்கயம் வட்டாரம் படியூர் கிராமத்தில் சிவகுமார் மற்றும் வீரணம்பாளையம் கிராமத்தில் செல்லமுத்து ஆகியோருக்கு சுழல் கலப்பை மானிய விலையில் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாலின் மற்றும் விசைத்தெளிப்பான்களும் வழங்கப்பட்டது.

    இந்த வேளாண் பண்ணை கருவிகளை திருப்பூர் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன், காங்கயம் வட்டார வேளாண்மை அலுவலர் ரேவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவக்குமார், சீனிவாசன், ஜோதீஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடையே பண்ணை கருவிகளின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தனர்.

    ×