என் மலர்
நீங்கள் தேடியது "காளமேகப்பெருமாள்"
- காளமேகப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
- இன்று (6-ந்தேதி) இரவு கோவில் முன் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.
மேலூர்
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில் பிரசித்தி பெற்ற காளமேகப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி தாயார் சன்னதி முன்பு காளமேகப் பெருமாள் ஸ்ரீதேவி- பூதேவியுடன் எழுந்தருளி னார். பின்னர் கோலாகல மாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
இதில் மதுரை ஒத்தக்கடை, மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த னர்.
இன்று (6-ந்தேதி) இரவு கோவில் முன் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடு களை கோவில் உதவி ஆணையர் செல்வி,செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்துள்ளனர்.






