என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paṟimutal"

    • விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரத்தில் தென்பெ ண்ணை ஆற்றிலிருந்துஅடிக்கடி திருட்டு தனமாக மணல் அள்ளி கடத்தி வருவதாக புகார் வந்தது
    • அப்போது அந்தவழியாக வந்த லாரியை நிறுத்தினார்கள். அப்போது அதன் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் தப்பி ஓடி விட்டார்.  விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரத்தில் தென்பெ ண்ணை ஆறு உள்ளது. இந்த ஆற்றங்கரையில் இருந்து அடிக்கடி திருட்டு தனமாக மணல் அள்ளி கடத்தி வருவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பார்த்தீபன் மேற்பா ர்வையில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை 4.30 மணியளவில் மரகதபுரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அபபோது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தினார்கள். அப்போது அதன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். லாரியை சோதனை செய்த போது அதில் மணல் ஏற்றப்பட்டு இருந்தது. இந்த மணல் மரகதபுரத்தில் உள்ள தென் பெண்ணை ஆற்றில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.   லாரியை போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். லாரி உரிமையாளர் யார். அவருக்கும் மணல் கடத்தலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×