என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிப்பர் லாரிகளை"

    • பொதுமக்கள் அந்த வழியாக சென்ற டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து முற்றுகையிட்டனர்.
    • ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ளது ஈங்கூர். இங்குள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் இருந்து புலவனூர் செல்லும் ரோடு வேலை கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் பாலம் அமைப்பதற்கான குழி தோண்டிய நிலையில் வேலை நடைபெறாமல் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருந்தது.

    பல்வேறு முறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் , பஞ்சாயத்து நிர்வாகத்தில் தகவல் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை இல்லாமல் இருந்தது.

    இதனையடுத்து பொதுமக்கள் அந்த வழியாக சென்ற டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து முற்றுகையிட்டனர்.

    பின்னர் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு இது பற்றி தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக எம்.எல்.ஏ. விரைந்து சென்றார்.

    அந்த இடத்தை பார்வையிட்ட ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    விரைவில் நடவடிக்கை எடுத்து ரோடு வேலை மற்றும் பாலம் கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×