என் மலர்
நீங்கள் தேடியது "ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிைலப்பள்ளி"
- பட்டங்கள் வழங்கும் விழா விமர்சையாக நடந்தது.
- யூ.கே.ஜி. படித்து முடித்த மழலையர்களுக்கு தாளாளர் பட்டங்கள் வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் வேலம்பாளையம் ரிங்ரோட்டில் ஜெய் சாரதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மழலையர் பிரிவு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கும் விழா விமரிசையாக நடந்தது. பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் ஈ.வேலுச்சாமி தலைமை தாங்கினார். யூ.கே.ஜி. படித்து முடித்த மழலையர்களுக்கு தாளாளர் பட்டங்கள் வழங்கினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாதிரி பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளி பொருளாளர் சுருதிஹரீஸ், பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






