என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டறிவு பயணம்"

    • நெல் வயலை பார்வையிட்டு தங்களின் சந்தேகங்களை வேளாண் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
    • உழவர் கண்டுநர் சுற்றுலாவை ஏற்பாடு செய்த வேளாண்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை உதவி இயக்குநர் முரளி ஆலோசணையின்படி,

    வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கோபி வட்டாரத்தை சேர்ந்த 50 விவசாயிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி மாநில அரசு விதைப்பண்ணைக்கு 2 நாட்கள் உழவர் கண்டுநர் சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டனர்.

    பின்னர் அங்கு சாகுபடி செய்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய நெல் வயலை பார்வையிட்டு தங்களின் சந்தேகங்களையும், சாகுபடி தொழில்நுட்பங்களையும் அங்குள்ள வேளாண் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

    மேலும் மேச்சேரியில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திற்கும் சென்று அங்குள்ள ஆட்டு இனங்கள், நோய் பராமரிப்பு முறைகள் மற்றும் பரன்மேல் ஆடு வளர்ப்பு முறை போன்ற தொழில்நுட்பங்களையும் அங்குள்ள கால்நடை மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது,

    இந்த உழவர் கண்டுநர் சுற்றுலாவானது எங்களுக்கு புது அனுபவத்தையும், பல நவீன தொழில் நுட்பங்களையும் நேரில் சென்று பார்த்து கற்றுக்கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    இந்த உழவர் கண்டுநர் சுற்றுலாவை ஏற்பாடு செய்த வேளாண்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

    ×