என் மலர்
நீங்கள் தேடியது "வெளி நோயாளிகள் பிரிவு"
- ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதார நிலையம்-வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
- பனைக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் பவுசியா பானு மற்றும் மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை பரமக்குடி அலுவலகங்கள் மூலம் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடம் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் மா.சுப்பிர மணியன் தலைமை தாங்கி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் வளரிளம் பருவத்தின ருக்கான சுகாதார சேவை களை மேம்படுத்தும் வகையில், வளரிளம் பருவத்தினருக்கான மாதிரி சிகிச்சை மையம் மற்றும் மேலாண்மை மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் 13 இடங்களில் கட்டப்பட்ட சுகாதார நிலையம் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு கட்டி டங்களை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ராமநாதபுரம் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அஜித் பிரபு குமார், பரமக்குடி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பிரதாப் குமார், ராமநாதபுரம் நகர் மன்றத் தலைவர் ஆர்.கே. கார்மேகம், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் இன்பா ரகு, பரமக்குடி நகர் மன்றத் தலைவர் சேது கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன், மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஒன்றிய கவுன்சிலர் தவுபீக் அலி, வேதாளை ஊராட்சி மன்றத்தலைவர் சையது அல்லா பிச்சை, பனைக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் பவுசியா பானு மற்றும் மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






