என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திர யானை"

    • சக்கரங்கள் மூலம் வீதி உலா அழைத்துச்செல்ல முடியும்.
    • பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கவும் செய்யுமாம்.

    விலங்குகள் மீது நடிகை திரிஷா பிரியம் கொண்டவர். இந்நிலையில் அவர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலுக்கு எந்திர யானை வழங்கி உள்ளார். அந்த யானையின் அறிமுக நிகழ்ச்சியில் ஊர்மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் செல்வ விநாயகர் கோவில் மற்றும் வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரபல நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ரூ.6 லட்சத்தில் எந்திர யானையை வழங்கி இருக்கிறார்கள்.

    3 மீட்டர் உயரமும், 800 கிலோ எடையிலும் நிஜயானை போன்று பிரமாண்டமாக இந்த எந்திர யானை உள்ளது. அதற்கு கஜா என பெயரிட்டு இருக்கிறார்கள்.

    கேரளாவில் உருவாக்கப்பட்ட இந்த எந்திர யானைக்கு தந்தங்கள், கண்கள், காதுகள் அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. சக்கரங்கள் மூலம் வீதி உலா அழைத்துச்செல்ல முடியும். சுவாமி ஊர்வலத்துக்கும் பயன்படுத்த முடியும். காதுகள், தும்பிக்கையும், தலையையும் அசைக்கின்றது. பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் செய்கிறது. பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கவும் செய்யுமாம்.



    இந்த எந்திர யானையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மேளதாளங்கள் முழங்க கோவிலில் நடைபெற்றது. உதவி போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு எந்திர யானையை அறிமுகம் செய்து வைத்தனர். அந்த யானை நகர வீதிகளில் அழைத்துச்செல்லப்பட்டபோது, மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக எந்திர யானை, கோவிலுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதனை தகர செட் அமைத்து நிஜயானை போன்று வைத்து இருக்கிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறும்போது, "வனவிலங்குகளை பாதுகாக்கும் விதமாகவும், யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் நடிகை திரிஷா இந்த எந்திர யானையை வழங்கி இருக்கிறார்" என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அச்சு அசல் உயிருள்ள யானை போல தயாரிக்கப்பட்ட எந்திர யானைக்கு நெற்றி பட்டம் உள்ளிட்ட அலங்காரங்களும் செய்யப்பட்டன.
    • எந்திர யானைக்கு கோவிலில் செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் யானைகள் வளர்க்கப்படுகின்றன.

    கோவில் விழாக்கள் மற்றும் சாமி ஊர்வலத்தில் இந்த யானைகள் பங்கேற்பது வழக்கம். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது, கோவிலின் அன்றாட பூஜைகளிலும் யானைகள் கலந்து கொள்ளும்.

    இவ்வாறு கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் சில நேரங்களில் மதம் பிடித்து பாகன்களை தாக்குவது, பக்தர்களை விரட்டுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

    இது போன்ற சம்பவங்களை தடுக்கவும், யானைகளை பாதுகாக்கவும் விலங்குகள் நல வாரியம் ஆலோசனை நடத்தி வந்தது.

    இதன் நிர்வாகி ஒருவர் அசல் யானைகளுக்கு பதில் ரோபோ யானைகளை பயன்படுத்தினால் என்ன? என்று யோசித்தார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.

    அதன்படி கோவில் யானை போன்று எந்திர யானை ஒன்று உருவாக்கப்பட்டது. அச்சு அசல் உயிருள்ள யானை போல தயாரிக்கப்பட்ட இந்த யானைக்கு நெற்றி பட்டம் உள்ளிட்ட அலங்காரங்களும் செய்யப்பட்டன.

    பின்னர் இந்த யானை கோவிலில் செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் திருப்திகரமாக இருந்தது.

    இதையடுத்து எந்திர யானை நேற்று திருச்சூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. தற்போது இந்த யானை கோவில் முன்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் இந்த யானை தும்பிக்கையை நீட்டி பக்தர்களுக்கு ஆசியும் வழங்குகிறது. இனி கோவிலில் நடைபெறும் ஊர்வலத்தில் சாமி சிலைகளையும் இந்த எந்திர யானையே சுமந்து செல்லும். இது பற்றி விலங்குகள் நல வாரியத்தினர் கூறும்போது, எந்திர யானைகள் பயன்படுத்துவதன் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இனி இடையூறு இருக்காது என்றனர்.

    ×