என் மலர்
நீங்கள் தேடியது "மரத்தில் கார் மோதல்"
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர்கள் மனோஜ் (வயது24), வெங்கடேஷ் (40), குற்றாலகனி (27). இவர்கள் கும்பகோணத்தில் நடந்த நண்பரின் விசேஷ நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று நள்ளிரவு 3 பேரும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். காரை மனோஜ் ஓட்டி வந்தார்.
இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. லட்சுமியாபுரம் பகுதியில் வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் சிக்கி படுகாய மடைந்த வெங்கடேஷ், குற்றாகனி ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






