என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாயத்து மின் மோட்டார்"

    • மின் மோட்டார் கேபிள் வயர் வெட்டப்பட்டு இருந்துள்ளது.
    • விசாரித்ததில் 2பேர் வயர் திருடியதை ஒப்பு கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், ஒட்டப்பாறை பஞ்சாயத்து, நாமக்கல்பாளையத்தினை சேர்ந்தவர் பூபதி (26). இவர் ஒட்டப்பாறை பஞ்சாயத்தில் குடிநீர் திறந்து விடும் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று பூபதி நாமக்கல்பாளையம் ரோட்டில் உள்ள மின் மோட்டார் அறைக்கு சென்று பார்த்த போது மின் மோட்டார் கேபிள் வயர் வெட்டப்பட்டு இருந்துள்ளது.

    இது குறித்து அவர் ஒட்டப்பாறை தலைவருக்கு தகவல் தெரிவித்து விட்டு அக்கம், பக்கம் தேடி பார்த்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் சென்றதை பார்த்தார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 2 ேபரையும் பிடித்து விசாரித்தார்.

    விசாரித்ததில் அவர்கள் வயர் திருடியதை ஒப்பு கொண்டனர். இதனையடுத்து 2 பேரையும் சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் வேலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், பாரதி நகர் பகுதியை சேர்ந்த பாலு (24), நாகராஜ் (27) என்பதும், இவர்கள் 2 பேரும் அண்ணன், தம்பிகள் எனவும், தற்போது ஈரோடு, சூரம்பட்டி வலசு, கோவலன் வீதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    ×