என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் உள்பட 3 பேர் கைது"

    • கம்பம் மெட்டுசாலை, கம்பம் பைபாஸ்சாலை சந்திப்பில் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் மெட்டுசாலை, கம்பம் பைபாஸ்சாலை சந்திப்பில் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பத்தில் இருந்து கேரளா நோக்கி வேகமாக சென்ற ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர்.

    அதில் 5 கிலோ 550 கிராம் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்ற 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கம்பம் கோம்பை சாலையை சேர்ந்த துரைப்பாண்டி மனைவி இந்திராணி (51). மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பூமிநாதன் (29), நாராயணதேவன்பட்டியை சேர்ந்த முத்தையா (39) என தெரியவந்தது.

    மேலும் தப்பியோடிய நபர் அன்பரசன் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வரு கின்றனர். 3 பேரையும் உத்தமபாளையம் கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினர். வாகன சோதனையில் திறமையாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.

    ×