என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் எம்பி கேசி பழனிசாமி"

    • கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக அமித் ஷா தெரிவித்தார்.
    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்ற அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

    வரும் சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக அமித் ஷா தெரிவித்தார்.

    அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

    இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார்.

    அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் தொடர்ந்து விமர்சித்து வரும் கே.சி.பழனிசாமி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சொத்து வரி கட்டாததால் சீல் வைத்ததாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
    • தகவல் அறிந்து வந்த கே.சி.பழனிசாமி மாநகராட்சி அதிகாரி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    கோவை:

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமிக்கு சொந்தமான கோவையில் உள்ள சேரன் டவரில், மாநகராட்சி அதிகாரிகள் 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் சொத்து வரி கட்டாததால் சீல் வைத்ததாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

    தகவல் அறிந்து வந்த கே.சி.பழனிசாமி மாநகராட்சி அதிகாரி இடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருந்தபோதும் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.

    ×