என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடைகளுக்கு தடுப்பூசி"

    • 4 மாதம் முதல் 8 மாத வயதுடைய கிடாரி கன்றுகளுக்கு மட்டும் இலவசமாக செலுத்தப்படுகிறது.
    • கால்நடை வளா்ப்போா் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெற்று கறவை மாடுகள் வாங்கிப் பயன்பெறலாம் என்றாா்.

    திருப்பூர் :

    கறவை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படுத்தும் புரூசெல்லோசிஸ் நோய், கோழிக்கழிச்சல் நோய் ஆகியவைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை அவிநாசி கால்நடை மருத்துவமனையில் கலெக்டர் வினீத் தொடங்கிவைத்தாா்.

    அப்போது அவா் பேசியதாவது:- புரூசெல்லோசிஸ் பசு, எருமைகளுக்கு கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தீவிர காய்ச்சலும் சினை ஈன்றும் தருவாயில் கருச்சிதைவும் ஏற்படுகிறது. மேலும் இந்த நோயினால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவினால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகிறது.

    இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாத வயதுடைய கிடாரி கன்றுகளுக்கு மட்டும் இலவசமாக செலுத்தப்படுகிறது. காளை கன்றுகளுக்கும் சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது. இந்த தடுப்பூசியை கால்நடை நிலையங்களில் நடைபெறும் முகாம்களில் இலவசமாகசெலுத்தப்படும். கால்நடை வளா்ப்போா் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெற்று கறவை மாடுகள் வாங்கிப் பயன்பெறலாம் என்றாா்.

    • கை கால் வலி மற்றும் மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.
    • புரூசெல்லோசிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

    குடிமங்கலம் :

    நச்சுயிரி புரூசெல்லா எனப்படும் பாக்டீரியாவினால் பரவக் கூடிய புரூசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய் மிகக் கொடிய நோயாக கருதப்படுகிறது. இது ஆடு, பன்றி மற்றும் மாடுகளைத் தாக்கி 7 மாதத்தில் கருச்சிதைவு ஏற்படச் செய்யும்.காளைகளில் விரை வீக்கத்தை ஏற்படச் செய்யும். அந்த காளைகளை இயற்கை முறை கருவூட்டலுக்கு பயன்படுத்தும்போது சினையூட்டப்படும் பசுக்களுக்கும் நோய் தாக்கத்தினை ஏற்படுத்தும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் நஞ்சுக்கொடி, ரத்தம் மற்றும் பால் மூலம் நச்சுயிரி வெளியேறுகிறது. இந்த நஞ்சுக்கொடி மற்றும் ரத்தத்தை சுத்தம் செய்வதாலும், பாலை நன்கு காய்ச்சாமல் குடிப்பதாலும் இந்த நோய் மனிதர்களுக்கு பரவக் கூடும். இந்த நோய் மனிதர்களைத்தாக்கும் போது அதிக காய்ச்சல், கை கால் வலி மற்றும் மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே இந்த நோயைத் தடுக்கும் வகையிலான தடுப்பூசி செலுத்தவேண்டியது அவசியமாகும்.அதன்படி 4 முதல் 8 மாதங்களுக்கு உட்பட்ட கிடேரி கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் தடுப்பூசி போடுவதன் மூலம் அதன் வாழ்நாள் முழுவதும் இந்த நோய்க்கான எதிர்ப்புத் திறன் கிடைக்கும். இதனைக் கருத்தில் கொண்டு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் மூலம் புரூசெல்லோசிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி குமரலிங்கம் கால்நடை மருந்தக கட்டுப்பாட்டு கிராமங்களில் 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 50 கிடேரி கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமில் உடுமலை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஜெயராம், திருப்பூர் நோய் புலனாய்வுப்பிரிவு உதவி இயக்குனர் கௌசல்யா, குமரலிங்கம் கால்நடை உதவி மருத்துவர் கார்த்திகேயன், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு மருத்துவர் சிவக்குமார், கால்நடை ஆய்வாளர்கள் பத்மா, கார்த்திக் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காந்திஜெயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 90 சதவீத கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    • மீதமுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 3-வது சுற்று கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

    இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை ஈரோடு மண்டல இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:

    விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சவாலாக கோமாரி நோய் அமைகிறது. இந்நோயால் கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பு தடைபடும்.

    கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க 6 மாதத்துக்கு ஒரு முறை என ஆண்டுக்கு 2 முறை இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தினோம்.

    மாவட்ட அளவில் 3 லட்சத்து 34,750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த மருந்துகள் பெறப்பட்டன. கால்நடை உதவி டாக்டர்கள் தலைமையில் 96 குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தினோம்.

    இதுவரை 3 லட்சத்து 4,050 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி முடித்துள்ளோம். அதாவது 90 சதவீத கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மீதமுள்ள கால்நடை களுக்கு வரும் 31-ந் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

    கால்நடை வளர்ப்போர் தவறாமல் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம், மருத்துவமனையை அணுகி கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×