என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் தேர்த்திருவிழா"

    • தேர்த் திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.

    பாப்பாரப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி தெலுங்கர் தெரு கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் ரத சப்தமி தேர்த் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடந்த புதன்கிழமை சாமி அனுமன் வாகனத்தில் திருவீதிஉலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    வியாழக்கிழமை இரவு சாமி சேஷ வாகனத்தில் வீதிஉலாவும் நடைபெற்றது. இன்று சாமி வீதி உலாவும், மாலை சாமித் திருக்கல்யாண சீர்வரிசை அழைப்பு ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து இரவு ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் சாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    இரவு கருட வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை வாஸ்து நிகழ்ச்சியைத் தொடர்ந்து சாமி ரதத்தில் எழுந்தருளி நிலை பெயர்த்தல் நடைபெற்றது. மாலை விழாவின் முக்கிய நிகழ்வான ரதசப்தமி தேரோட்டம் நடைபெற்றது.

    பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் மற்றும் வாணிக செட்டியார் சமூகத்தினர் விழாக்குழுவினர் செய்தனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.

    • 7 மற்றும் 8-ந் தேதிகளில் தெப்போற்சவமும், தீர்த்தவாரியும் நடக்கின்றன.
    • இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் அறநிலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள பாலமலை ஶ்ரீ அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அரங்கநாதர் அன்ன வாகனத்திலும், அனுமந்த வாகனத்திலும், கருடவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

    அதனையடுத்து செங்கோதையம்மன் அழைப்பு நடக்கிறது. வியாழக்கிழமையன்று நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி மாலை 3 மணி அளவில் நடக்கிறது. மாலை 4 மணியளவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலின் மாடவீதிகளில் வலம் வருகிறார்.

    6-ந் தேதி நடக்கும் பரிவேட்டை உற்சவத்தில் பெருமாள் குதிரை மீதேறி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருமங்கையாழ்வார் வைபவமும் நடக்கின்றன. 7 மற்றும் 8-ந் தேதிகளில் தெப்போற்சவமும், தீர்த்தவாரியும் நடக்கின்றன. விழாவில் தினமும் அன்னதானமும், பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நாமசங்கீர்த்தன கோஷ்டி யினரின் பஜனைகளும் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்துள்ளார்.

    அதேபோல, இடிகரை பேரூராட்சி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 1000 வருடங்களுக்கு முந்தைய ஸ்ரீ பள்ளி கொண்ட ரங்கநாதர் கோவில் திருத்தேர் உற்சவ விழா வருகிற 4-ந் தேதி நடக்கிறது. கடந்த 26-ந் தேதி தொடங்கிய விழாவில் 28-ந் தேதி கொடியேற்றம், அன்ன வாகனம் நிகழ்ச்சிகள். தொடர்ந்து, ரங்கநாதர் சிம்ம வாகனத்திலும், அநுமந்த வாகனத்திலும், கருடவாகனத்திலும், அதன்பிறகு, மோகினி அலங்காரத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளியும், திருக்கல்யாண மகோத்சவம் மற்றும் யானை வாகனத்தி லும் காட்சி தருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் வருகிற 4-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. அதனை தொடர்ந்து 5-ந் தேதி, குதிரை வாகனத்திலும், 6-ந் தேதி சேஷ வாகனத்திலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் அறநிலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

    ×