என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்பிகேஸ்வரி அம்மன் கோவில் தேர்த்திருவிழா
- தேர்த் திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.
பாப்பாரப்பட்டி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி தெலுங்கர் தெரு கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் ரத சப்தமி தேர்த் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த புதன்கிழமை சாமி அனுமன் வாகனத்தில் திருவீதிஉலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வியாழக்கிழமை இரவு சாமி சேஷ வாகனத்தில் வீதிஉலாவும் நடைபெற்றது. இன்று சாமி வீதி உலாவும், மாலை சாமித் திருக்கல்யாண சீர்வரிசை அழைப்பு ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து இரவு ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் சாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இரவு கருட வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை வாஸ்து நிகழ்ச்சியைத் தொடர்ந்து சாமி ரதத்தில் எழுந்தருளி நிலை பெயர்த்தல் நடைபெற்றது. மாலை விழாவின் முக்கிய நிகழ்வான ரதசப்தமி தேரோட்டம் நடைபெற்றது.
பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் மற்றும் வாணிக செட்டியார் சமூகத்தினர் விழாக்குழுவினர் செய்தனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.






