என் மலர்
நீங்கள் தேடியது "இளம்பெண் உள்பட 2 பேர் மாயம்"
- தேனி அருகே இளம் பெண் உள்பட வாலிபரும் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி மகள் மகாவித்யா(17). இவர் மதுரை சாலையில் உள்ள பேக்கரியில் வேலைபார்த்து வந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற மகாவித்யா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
சின்னமனூர் விஷ்வன்குளத்தை சேர்ந்தவர் அருண்குமார்(28). இவர் சின்னமனூர் காதிகிராப்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.
- தேனி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் பிச்சை என்ற வீராச்சாமி (வயது88). இவருடைய மகன்கள் மற்றும் மகள் ஆகியோருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கோவில்களுக்கு சென்று வந்த அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர்.
ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் கங்காதேவி (வயது19). இவர் க.விலக்கு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






