தேனி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் மாயம்

தேனி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் பிச்சை என்ற வீராச்சாமி (வயது88). இவருடைய மகன்கள் மற்றும் மகள் ஆகியோருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கோவில்களுக்கு சென்று வந்த அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர்.

ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் கங்காதேவி (வயது19). இவர் க.விலக்கு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com