என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிக்கட்டி"

    • சின்னமநாயக்கன் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வங்காநரி ஜல்லிக்கட்டு காண கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
    • இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 பேரையும் வாழப்பாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த ரங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 24). இவரது சகோதரர் அரவிந்த்குமார்(20), உறவினர்கள் பூபாலன், ஆனந்த் ஆகிய 4 பேர், சின்னமநாயக்கன் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வங்காநரி ஜல்லிக்கட்டு காண கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

    அப்போது அதிக ஹாரன் சத்தம் ஏற்பட்டதாக, சின்னம நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளை ஞர்கள், அவர்களை தட்டிக் கேட்டுள்ளனர்.

    இதில் இரு தரப்பின ருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ரங்கனூரைச் சேர்ந்த

    சந்தோஷ்குமார், அரவிந்த்கு மார், பூபாலன், ஆனந்த் ஆகிய 4 பேரையும் தாக்கியதாக, சின்னமநாயக்கன்பா ளையம் கிராமத்தைச் சேர்ந்த வைரமணி(31), பிரவீன்கு மார்(28), பிரேம்குமார் (20), வெங்கடேஷ் என்கிற ஜெமினி (19) ஆகிய 4 பேரையும் வாழப்பாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×