என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல் சூளைகள்"

    • பன்னிமடை கிராமங்களில் அதிகளவில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.
    • பசுமை தீர்ப்பாயம் இதுகுறித்து விசாரிக்க குழுவும் அமைத்தது.

    கவுண்டம்பாளையம்

    கோவை மாவட்டம் வீரபாண்டி, தடாகம், சோமையம்பா–ளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை கிராமங்களில் அதிகளவில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.

    இவை அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து உரிய அனுமதியின்றி செயல்படும் சூளைகளை மூடி வைக்கவும், மின்சாரத்தை துண்டிக்கவும் கடந்த 2021-ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 177 செங்கல் சூளைகள் இயங்குவதற்கு கோவை மாவட்ட கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டார்.

    இந்த வழக்கை தாமாக விசாரித்த பசுமை தீர்ப்பாயம் இதுகுறித்து விசாரிக்க குழுவும் அமைத்தது.

    இதற்கிடையே சூளைகளை மூடுவதற்கான கலெக்டரின் தடை உத்தரவை எதிர்த்து சூளை உரிமையாளர்கள் புவியியல், சுரங்கத்துறை ஆணையாளரிடம் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த நிலையில் விதிகளை மீறியதாக மூடப்பட்டிருக்கும் செங்கல் சூளைகளில் 163 சூளைகளுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை அபராதம் விதித்தும், அபராத தொகையை அரசு கணக்கில் செலுத்தியவர்கள் தங்களின் சூளைகளில் இருப்பில் இருக்கும் செங்கற்களை அப்புறப்படுத்தி கொள்வதுடன், சம்பந்தப்பட்ட ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம் என்று புவியியல் சுரங்கத்துறை ஆணையர் ஜெயகாந்தன் உத்தரவிட்டு இருக்கிறார்.

    இதனை தொடர்ந்து கோவை நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, தடாகம், சோமையம்பாளையம் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகள் அனைத்திலும் இன்று முதல் பணிகள் தொடங்கின. இந்த பணிகளில், வட மாநிலத்தவர்கள், தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை இல்லாததால் ஊருக்கு சென்ற அவர்கள் தற்போது திரும்பி வர தொடங்கி உள்ளனர்.

    ஏற்கனவே பலர் திரும்பி வந்து விட்டனர். இன்னும் சிலர் வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்கும் பணிகளும், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட செங்கற்கள் எடுத்து அனுப்பும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

    ×