என் மலர்
நீங்கள் தேடியது "வள்ளிக்கிழங்கு"
- சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெரு, வாசவி மஹால் இறக்கம், பால் மார்க்கெட், ஆனந்தா காய் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.
- இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 5 டன் வரை சர்க்கரை வள்ளிக்கிழங்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெரு, வாசவி மஹால் இறக்கம், பால் மார்க்கெட், ஆனந்தா காய் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளதால் அனேக இடங்களில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 5 டன் வரை சர்க்கரை வள்ளிக்கிழங்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்கு விற்பனைக்கு வரும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது : -
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாதங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிகளவில் விற்பனைக்கு வரும். தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து உள்ளதால், விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு கள் வரத்து அதிகரித்து சீசன் களைகட்டியுள்ளது. ஒரு கிலோ சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரூ.25, ரூ.22, ரூ.20 என அளவைப் பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.சர்க்கரை வள்ளிக்கி ழங்குகள் வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாது உப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்தவை ஆகும். மேலும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த கிழங்குகள் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். எனவே இவற்றை பெண்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.