என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பச்சிளம் குழந்தை வீச்சு"

    • ஆண் குழந்தையை வீசி சென்றது யார்?
    • குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை,

    கோவை சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் மருத கோனார் வீதியில் உள்ள சாக்கடையில் பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தை இறந்து கிடந்தது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் இறந்து கிடந்த குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை வீசி சென்றது யார்? தகாத உறவால் குழந்தை பிறந்ததால் அதனை கொலை செய்து வீசி சென்றார்களா ? அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் வீசி சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களில் குழந்தையை யாராவது வீசி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சாக்கடையில் இறந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×