என் மலர்
நீங்கள் தேடியது "-எஸ்.பி. வேலுமணி மீண்டும் குற்றச்சாட்டு"
- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 87 மற்றும் 88 -வது வார்டுகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- மழைநீர் வடிகால் பணிக்காக டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதனை ரத்து செய்து விட்டார்கள்.
குனியமுத்தூர்
தொடர் மழையால் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட குனியமுத்தூர் 87 மற்றும் 88 -வது வார்டுகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 87 மற்றும் 88 -வது வார்டுகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பகுதியானது தாழ்வான பகுதி என்ற காரணத்தால் மழைநீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் உடனுக்குடன் அதனை சரி செய்து விடுவோம். ஆனால் தற்போது காலையிலிருந்து கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த அதிகாரியும் நேரில் வரவில்லை. இப்பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காக டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதனை ரத்து செய்து விட்டார்கள். கடந்த ஒன்றை ஆண்டுகளாக குறிச்சி குளம் சீரமைப்பு பணி நடைபெறாமல் நிறுத்தி வைத்து விட்டார்கள். பின்னர் சட்டசபையில் நான் பேசிய பிறகு, தற்போது வேலையை தொடங்கி இருக்கிறார்கள்.
டெண்டர் விடப்பட்ட 500 சாலை பணிகளையும் ரத்து செய்து இருக்கின்றனர். காரணம் கேட்டால் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். தற்போது வீட்டு வரியை உயர்த்தி இருக்கிறார்கள். மின் கட்டணத்தையும் உயர்த்தியிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அந்த பணத்தை வைத்து வேலைகளை செய்ய வேண்டியது தானே. கோவை மாவட்டத்தை மட்டும் இந்த தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது. அதிகாரிகள் மக்களை பார்க்க வேண்டும். மக்கள் பணியை சரியாக செய்ய வேண்டும்.இதற்கு பின்னர் அதிகாரிகளிடம் மனு கொடுக்க உள்ளேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் சேதம் அடைந்த சாலைகளை முற்றிலுமாக சீர்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
கோவை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பாகுபாடின்றி மக்களுக்காக வேலை செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.






