என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ. 15 லட்சம் மோசடி"

    • கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
    • நிலத்தை நேரில் பார்வையிட்ட கார்த்திகேயன், அதை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார்

    கோவை,

    அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது39). இவரது மனைவி கோவையை சேர்ந்தவர்.

    இதனால் கார்த்திகேயன் கோவை பீளமேடு நேருநகரில் நிலம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டார். இதற்காக பீளமேட்டில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தை அணுகினார்.

    அதன் உரிமையாளர் ஜெகநாத்(37) என்பவர் நேருநகரில் உள்ள பிளாட்டில் நிலம் விற்பனைக்கு இருப்பதாக கூறினார்.

    தொடர்ந்து நிலத்தை நேரில் பார்வையிட்ட கார்த்திகேயன், அதை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார்.

    இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜெகநாத்திடம் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ஜெகநாத் பத்திர பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஏற்கனவே பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது ஜெகநாத் தான் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக உறுதி அளித்தார். நீண்ட காலமாகியும் அவர் கார்த்திகேயனுக்கு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இது குறித்து கார்த்திகேயன் மீண்டும் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஜெகநாத் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இவர் ராமநாதபுரம் ஒண்டிப்புதூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ. 30 லட்சம் நில மோசடி வழக்கில் கடந்த 8-ந் தேதி கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இது போல் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்திருக்கலாம் என்று தெரிகிறது. அதன்பேரில், அவரால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×