என் மலர்
நீங்கள் தேடியது "குட்டி காவலர்கள்"
- போதை பொருட்கள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- சீட் பெல்ட் அணியவும் வலியுறுத்துவேன்.
கோவை,
பொள்ளாச்சி அடுத்த கோடங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குட்டிக்காவலர் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் மாணவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை உறுதி மொழியாக ஏற்று கொண்டனர்.
இத்திட்டத்தில் இணைந்துள்ள பள்ளி மாணவர்கள், பொதுமக்களிடையே போக்குவரத்தை ஒழுங்குப டுத்துதல், போக்குவரத்து விதிமு றைகளை பின்பற்றுதல் ஆகியன குறித்தும், போதை பொருட்கள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதில் தலைமை ஆசிரியர் தினகரன், ஆசிரியை சத்தியா முன்னிலையில் மாணவர்கள் உறுதிெமாழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் இன்று முதல் குட்டி காவலராக பொறுப்பேற்றுள்ளேன். பயணத்தின்போது சாலை விதிகளை கவனமாக கடைபிடிப்பேன். உறவினர்களையும், நண்பர்களையும் சாலை விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துவேன். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியவும், 4 சக்கர வாகனத்தில் செல்லும் போது சீட் பெல்ட் அணியவும் வலியுறுத்துவேன். என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, பள்ளி படிப்பு முடிந்ததுமே விலை உயர்ந்த அதிக திறன் உள்ள இருசக்கர வாகனங்களை வாங்கி மாணவர்கள் ஒட்டுகின்றனர். மாணவர்களிடம் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் மாணவ சமுதாயம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க நல்வாய்ப்பாக அமையும் என்றனர்.






