என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "51.08 சதவீதம் பேர் இணைத்தனர்"

    • ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களிலும் படிவம் 6பி யில் பதிவு செய்யலாம்.
    • கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதல் நடந்து வருகின்றன.

    ஊட்டி

    இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும், தங்களுடைய ஆதார் அட்டை குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6 பி யில் சமர்ப்பிக்கலாம்.

    வாக்காளர் அடையா அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதல் நடந்து வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சட்டசபை தொகுதியில் 54.20 சதவீதம்,கூடலூர்(தனி) 48.38 சதவீதம், குன்னூர் தொகுதியில் 50.44 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 51.08 சதவீத வாக்காளர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் voter helpline செயலி மூலமும், ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களிலும் படிவம் 6பி யில் பதிவு செய்யலாம்.

    வீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வாக்காளர்கள் தங்களது சுய விருப்பத்துடன் ஆதார் எண்ணை தெரிவித்து, கருடா செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது படிவத்திலும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் இப்பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×