என் மலர்
நீங்கள் தேடியது "பூலித்தேவர் பிறந்தநாள்"
- பூலித்தேவர் தொலைநோக்குப் பார்வைமிக்க தலைவர், சாதுர்யமான உத்திவகுப்பாளர்.
- பாரத விடுதலைக்கான ஆரம்பகால மற்றும் மிகவும் வலிமையான போராட்டங்களில் ஒன்றை வழிநடத்தினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவர் அவர்களின் பிறந்தநாளில், தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துகிறது.
தொலைநோக்குப் பார்வைமிக்க தலைவர், சாதுர்யமான உத்திவகுப்பாளர் மற்றும் அச்சமற்ற போர்வீரரான அவர் கொடுங்கோல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதிபட நின்று, பாரத விடுதலைக்கான ஆரம்பகால மற்றும் மிகவும் வலிமையான போராட்டங்களில் ஒன்றை வழிநடத்தினார். அவரது லட்சியங்கள், தியாகங்கள் மற்றும் மரபுகள், விடுதலை போராட்டத்துக்கு வலுவான அடித்தளமிட்ட இடைவிடாத போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்தன. அவை நீடித்த வலிமையின் மூலாதாரமாகத் தொடர்ந்து வலுவான, மீள்தன்மை மற்றும் வளமான #வளர்ச்சியடைந்தபாரதத்தை உருவாக்குவதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சல்லிக்காசு தரமுடியாது என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவர்.
- நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு.
சென்னை:
மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
'சல்லிக்காசு தரமுடியாது' என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்.
நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு.
இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






