என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் அரிசி மூட்டைகள்"

    • மளிகை கடையில் சோதனை செய்ததில் அரசு தடை செய்யப்பட்ட 1600 கிலோ குட்கா பான்மா சாள போன்ற பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் குடோன் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காப்பான் மசாலாவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மேலும் கள்ளசாராயம் கடத்தல், மது கடத்தல் ரேஷன் அரிசி பதில்கள் உள்ளிட்ட சட்ட விரோதங்களை செய்பவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில் விழுப்புரம் அருகே ஆலம்பாடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூபபிரண்டு ஸ்ரீ நாதாவுக்கு வந்த தகவலின் படி டிஎஸ்பி பார்த்திபன் மேற்பார்வையில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள கடை மற்றும் குடோன்களில் திடீரென சோதனை செய்தனர்.

    அப்போது ஆலம்பாடி மெயின் ரோட்டை சேர்ந்த ரமேஷ் வீட்டின் முன்புறம் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையில் சோதனை செய்ததில் அரசு தடை செய்யப்பட்ட 1600 கிலோ குட்கா பான்மா சாள போன்ற பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் குடோன் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 1600 குட்கா பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோன்று ஆலம்பாடி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசருக்கு வந்த தகவலி ன் படி அந்த பகுதியில் தீவிர சோதனை செய்தனர். அப்போது ஆலம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மனைவி (சசிகலா வயது 45) இவர் பல்வேறு பகுதியில் இருந்து ரேஷன் அரிசிகளை விளக்கி வாங்கி 25 கிலோ மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

    உடனே அரகண்டநல்லூர் போலீசார் இது குறித்து குடிமை பொருள் பதுக்கல் மற்றும் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் குடிமை பொருள் குற்றப்பி ரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து சுமார் 50 மூட்டைகளாக இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    ×