என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோவில் கைதான"

    • பங்களாபுதூர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வெளியே வந்த நாகராஜை கைது செய்தனர்.
    • பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    பங்களாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (41). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் இந்த வழியாக நடந்து வந்தார். 5 வயது சிறுமியை வழிமறித்து வீட்டிற்குள் தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

    இதையடுத்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாகராஜ் மீது பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தனர்.

    இந்நிலையில் இது பற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நாகராஜை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வெளியே வந்த நாகராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×