என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக்காரா அணை நிரம்பியது-"

    • அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது.
    • அவலாஞ்சி அணைக்கு 750 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. அணைகள், ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அணைகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் பைக்கார அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    அணையில் இருந்து கொட்டும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.இதற்கிடையே கிளன்மாா்கன் அணையின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவா் பலவீனமாக இருப்பதால் அணை உடையும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு அந்த அணையில் மட்டும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

    குந்தா அணையிலிருந்து டனல் வழியாக தண்ணீா் வெளியேற்றப்பட்டதால் நீா்வரத்து அதிகரித்து பில்லூா் அணைக்கு திறந்து விடப்பட்டது. அவலாஞ்சி அணைக்கு 750 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே மின் உற்பத்திக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. அவலாஞ்சி அணை ஒரிரு நாளில் நிரம்பி திறக்கப்படும் என தெரிகிறது.

    ×