என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிக்கு நிவாரணம்"

    • பசு மாட்டின் மீது மண் சரிந்து விழுந்து மாடு உயிர் இழந்தது.
    • குன்னூர் வட்டாட்சியர் , வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    குன்னூர்,

    குன்னூர் அருகே உள்ள லோயர் குரூஸ் பெட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. விவசாயி. இவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தார். அதனை தனது வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. இதில் பசு மாட்டின் மீது மண் சரிந்து விழுந்து மாடு உயிர் இழந்தது. இதனைக் கேள்விப்பட்ட குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பசு மாட்டின் உரிமையாளர் ராஜூவுக்கு ஆறுதல் கூறினர். இதையடுத்து குன்னூர் தாலுகா அலுவலகத்தில் அரசு சார்பில் பசுமாட்டை இழந்த விவசாயி ராஜூவுக்கு குன்னூர் சப்-கலெக்டர் சிவகுமார் ரூ.30 ஆயிரத்தை வழங்கினார். அருகில் துணை வட்டாட்சியர் நந்தகோபால், அலுவலர் சாரதா மற்றும் வருவாய் அலுவலர்கள் இருந்தனர்.

    ×