என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய பயிர்கள் நாசம்"

    • 28 வீடுகள் இடிந்தன
    • வருவாய் துறையினர் கணக்கெடுப்பு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. குடியாத்தம், கே.வி.குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆலங்கட்டிகளை பொதுமக்கள் கையில் எடுத்துச் சென்றனர்.

    இந்த கன மழையால் பரதராமி சாலையில் 20-க்கும் மேற்பட்ட புளியமரம், வேப்ப மரங்கள் அடியோடு சாய்ந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்தது.

    இதுபோல குடியாத்தம் சுற்றுவட்டார கிராமங்களிலும் மரங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டி க்கப்பட்டது. நெடுஞ்சா லைத் துறை மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குடியாத்தம் பகுதியில் பலத்த காற்று காரணமாக 100-க்கும் மேற்பட்ட தென்னை வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இந்த மழையால் பெருமளவில் விவசாய பயிர்கள் நாசம் அடைந்துள்ளன.

    அணைக்கட்டு பீஞ்சமந்தை பகுதிகளில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 மாடு பலியானது.

    கே. வி. குப்பம் அருகே உள்ள மேல் காவனூர், மாச்சனூர், தேவதரிஷி குப்பம் பகுதிகளில் 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கே.வி.குப்பம் வட்டார பகுதியில் 100 ஏக்கருக்கு மேலான விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது. கே.வி.குப்பம் தாசில்தார் மற்றும் வேளாண்மை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய பயிர்கள் குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    ஊசூர் அணைக்கட்டு பள்ளிகொண்டா பகுதிகளில் மிக மழையா விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களாக இந்த மழையில் வேலூர் மாவட்டத்தில் இதுவரை 3 மாடுகள் பலியாகி உள்ளது. 28 வீடுகள் இடிந்துள்ளன. இதில் 14 வீடுகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டது. இது குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் வெப்பம் குறைந்துள்ளது. விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    • உழவர் சந்தைகளில் விவசாயிகள் தயாரிக்கும் கீரை சூப்புகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
    • விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-

    கிராமங்களில் உற்பத்தியாகும் இயற்கையுடன் கூடிய முருங்கைக்கீரை, புதினா, பிரண்டை, வல்லாரை, முடக்க த்தான் போன்ற கீரைகளில் இருந்து கலப்படம் இல்லாமல் விவசாயிகள் இயற்கை முறையில் சூப் தயாரித்து வருகின்றனர்.

    தொண்டாமுத்தூர் பகுதிகளில் தமிழக அரசு மூலம் புத்துயிர் பெற்று வரும் உழவர் சந்தைகளில் இந்த வகை சூப் விற்பனை செய்யவும், குறிப்பாக ஆர். எஸ்.புரம் மற்றும் பிற உழவர் சந்தைகளில் விவசாயிகள் தயாரிக்கும் மூலிகை தன்மை கொண்ட கீரை சூப்புகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

    கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேணுகோபால் கூறியதாவது:- பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம் பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் விவசாய நிலங்களில் சுற்றித் திரிகிறது.

    இவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சோமயம்பாளையம் பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கலெக்டர் இதனை தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×