என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலத்தரகா்"

    • திருச்சி சாலை ெரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்றபோது மா்ம நபா்கள் குமரேசன் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் - திருச்சி சாலை ஜெய்நகரைச் சோ்ந்தவா் குமரேசன் (வயது 48). இவர் நிலத்தரகா் தொழில் செய்து வந்தாா்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எம்ஜிஆா் நகா் அருகே உள்ள அரசு மதுக் கடையில் நண்பா்களுடன் மது குடித்துவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

    திருச்சி சாலை ெரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்றபோது மா்ம நபா்கள் குமரேசன் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    காரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமரேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாா்.

    இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவம் என்ன காரணத்திற்காக நடந்தது? என தெரியவில்லை. குமரேசனை கொலை செய்தவா்கள் அவருடன் காரில் சென்றவா்களா? அல்லது வாகனத்தில் பின்தொடா்ந்து சென்று கொலை செய்தாா்களா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறாா்.

    கொலையாளிகளை கண்டுபிடிக்க நாமக்கல் டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.காமிராகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ×