என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை"

    • ஆடி மாதம் முழுவதும் ராமாயணம் வாசித்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
    • மகா கணபதி ஹோமம் நடைபெற்றது

    பந்தலூர்,

    பந்தலூர் அருகே எருமாடு சிவன் கோவிலில் ஆடி மாதம் முதல் நாளான நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு பாலாபிஷேகம் நடந்தது. 6 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ராமாயணம் வாசிக்கும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு பகவதி சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்து சுவாமியை தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முழுவதும் ராமாயணம் வாசித்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    ×