என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொடக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம்"

    • சாயத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மொடக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
    • எங்களது கோரிக்கையை ஏற்காமல் அனுமதி அளித்தால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று பொதுமக்கள் அறிவித்தனர்.

    மொடக்குறிச்சி, ஜூலை.19-

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டு பாளையம் பகவதி நகரில் அமைய உள்ள சாயத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

    தொடர்ந்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியான காட்டு பாளையம் பகவதி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சாயத் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதி வழங்க முயற்சி நடப்பதாகவும் தெரியவருகிறது.

    இந்நிலையில் இன்று நடைபெறும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் சாய தொழிற்சாலை அமைய கட்டிட அனுமதி மற்றும் போர்வெல் அமைப்பதற்கான அனுமதி வழங்க இருப்பதாகவும் அறிந்தோம்.

    எனவே குறித்து சாயத் தொழிற்சாலையை தொடங்க அனுமதிக்க கூடாது இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கெட்டுவிடும். மேலும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் என்று பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம் .

    இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் 4-வது தீர் மானமாக கட்டிடத்திற்கு மற்றும் போர்வல் அமைக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிந்து அனைவரும் இங்கு வந்துள்ளோம்.

    இதற்கு அனுமதிக்க கூடாது என்று பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும் எங்களது கோரிக்கையை ஏற்காமல் அனுமதி அளித்தால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று பொதுமக்கள் அறிவித்தனர்.

    ×