என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவேனு தவிட்டுமேடு முத்து மாரியம்மன்"

    • கோத்தகிரி அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் திமிதித்தனர்

    ஊட்டி, ஜூன்.9-

    கோத்தகிரி அரவேனு அருகே தவிட்டுமேட்டில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 3-ந் தேதி காலை காளி பூஜை, முனீஸ்வரர் பூஜைகள் நடத்தப்பட்டு கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    4-ந் தேதி அம்மன் பவனி வருதல், 5-ந் தேதி பூ கரகம் எடுத்து வருதல், அக்னி சட்டி ஊர்வலம், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து 6-ந் தேதி காலை காளியம்மாள் நாக பூஜையும், தொடர்ந்து முனீஸ்வரர் மற்றும் முன்னடியானுக்கு கிடா வெட்டி பூஜை நடைபெற்றது.

    நேற்று முன்தினம் காலை அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மஞ்சள் நீராடலும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

    ×