என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு மனிதன்"

    • ஆணழகன் போட்டியிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற கிழக்கு தமிழ்நாடு அளவிலான வலுதூக்கும் போட்டியிலும் திருவாரூர் மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மன்னார்குடியை சேர்ந்த வீரர்கள் விமல்ராஜ், சசிகுமார், விஜயகுமார், சுதர்சன், சமிர் அஹமது வீரவேல், சக்திவேல் மற்றும் பலர் சாதனை படைத்தனர்.
    • வலுதூக்கும் போட்டியில் மன்னார்குடி வீரர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.

    மன்னார்குடி:

    மாநில அளவில் பழனியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற கிழக்கு தமிழ்நாடு அளவிலான வலுதூக்கும் போட்டியிலும் திருவாரூர் மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மன்னார்குடியை சேர்ந்த வீரர்கள் விமல்ராஜ், சசிகுமார், விஜயகுமார், சுதர்சன், சமிர் அஹமது வீரவேல், சக்திவேல் மற்றும் பலர் சாதனை படைத்தனர். முகிலன் என்பவர் இரும்பு மனிதன் என்ற சிறப்பு பட்டம் வென்றார்.

    சாதனை படைத்தவர்கள் திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் -பிட்னஸ் சங்கத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவருமான டாக்டர் மன்னார்குடி அசோக்கு மார், செயலாளர் ரத்தி னபாலன், பொருளாளர் விஜய்ஜேசி, மண்டலத் தலைவர் என்.எஸ்.அசோக்குமார், என். எஸ். பாலசுப்ரமணியம், எஸ்.ராமதாஸ், உலக வலுதூக்கும் வீரர் சி.விமல்ராஜா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் சங்கத்தின் தலைவர் டாக்டர் மன்னார்குடி அசோக் குமார் வீரர்களை பாராட்டி பரிசளித்தார்.

    ×