என் மலர்
நீங்கள் தேடியது "கருட வாகனம்"
- கருட சேவையின் மூலம் வேதங்கள் உணர்த்தும் பரம்பொருளைத் தரிசிப்பதாகக் கருதப்படுகிறது.
- பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா வரும்போது, பக்தர்கள் அவரை நேரடி தரிசனம் செய்கிறார்கள்.
கருட வாகன சேவை என்பது வைணவக் கோவில்களில், பிரம்மோற்சவம் போன்ற முக்கிய திருவிழாக்களின் போது, திருமால் கருடப் பறவையின் வடிவிலான வாகனத்தில் எழுந்தருளி, திருவீதிகளில் வீதி உலா வரும் நிகழ்வாகும். இது வைணவத்தில் மிக உயர்ந்த தரிசனமாகக் கருதப்படுகிறது, மேலும் இது செல்வத்தையும், மோட்சத்தையும் அளிக்கும் என்று நம்பப்படுகிறது. கருட வாகனம் 'பெரிய திருவடி' என்றும் அழைக்கப்படுகிறது,
மேலும் கருட சேவையின் மூலம் வேதங்கள் உணர்த்தும் பரம்பொருளைத் தரிசிப்பதாகக் கருதப்படுகிறது. பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா வரும்போது, பக்தர்கள் அவரை நேரடி தரிசனம் செய்கிறார்கள். கருட வாகனத்தில் பெருமாளைத் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது வைணவர்களின் நம்பிக்கை. கருடன் வேதங்களின் வடிவமாக கருதப்படுவதால், கருட சேவையின் போது பெருமாளை தரிசிப்பது, வேதங்களின் சாராம்சத்தை உணர்வதற்கு சமம்.
பல வாகனங்களில் பெருமாள் எழுந்தருளினாலும், கருட வாகன சேவை மிகவும் உயர்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பல வைணவக் கோவில்களின் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் கருட சேவையும் ஒன்றாகும். கோவிலுக்குள் வர இயலாத முதியவர்கள், நோயுற்றவர்கள் போன்றோருக்காக இறைவன் கருணையுடன் வீதிக்கு எழுந்தருள்வதாகவும் கருதப்படுகிறது. சுருக்கமாக, கருட வாகனம் என்பது திருமாலின் மிக முக்கியமான வாகனங்களில் ஒன்று. கருட வாகன சேவை என்பது திருமாலின் பேரருளைப் பெற்று, மறுபிறப்பில்லா பேறு அடையும் ஒரு வைணவ வழிபாட்டு முறையாகும்.
- 7-ம் திருவிழாவான நேற்று அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெற்றது.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி அன்று நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் ஆடி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
7-ம் திருவிழாவான நேற்று மாலையில் அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெற்றது.
கலிவேட்டை
8-ம் திருவிழாவான இன்று காலையில் உகப்படிப்பு, பணிவிடை, பால் அன்னதர்மம் மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்பட்டது. மாலையில் உகப்படிப்பு, பணிவிடையும் தொடர்ந்து அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கடலில் கலி வேட்டையாடுதல் நடக்கிறது. ஒன்பதாம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) மாலையில் அய்யா வைகுண்டர் ஆஞ்சநேயர் வாகன பவனியும், நாளை மறுநாள் 31 -ந் தேதி பத்தாம் திருவிழா மாலையில் இந்திர வாகன பவனியும் நடக்கிறது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி அன்று நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார். அன்று நள்ளிரவு ஒரு மணிக்கு அய்யா வைகுண்டர் காளை வாகனபவனி நடக்கிறது.
நேற்று நடைபெற்ற கருட வாகன பவனியில் அய்யாவழி அகிலத் திருக் குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணைத் தலைவர் அய்யாபழம், இணைத்தலைவர் விஜயகுமார், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வின் நிர்வாக குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன்,, உறுப்பினர்கள் ஜோதிலிங்கம், ஆனந்த், ஆதவன், கணேசன், செல்வராஜ், அழகேசன், பாலகிருஷ்ணன், கணேஷ், கண்ணன், வினோத், கொட்டங்காடு குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






