என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போபால் விமான நிலையம்"

    மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து 125 பேருடன் வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது. #BhopalAirport #planeskidsonrunway

    போபால்:

    மும்பையில் இருந்து நேற்று இரவு மத்தியப்பிரதேச மாநிலம் போபாலுக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான  விமானம், போபால் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    அதில் 125 பயணிகளும், விமானிகள், பணிப்பெண்கள் இருந்தனர். ஓடுபாதையில் தரையிறங்கிய போது, நொடிப்பொழுதில் ஓடுபாதையை விட்டு விலகியது. இதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கவனித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக, விமானிகளின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு படையினரும், முதலுதவி குழுவினரும் அந்த இடத்துக்கு விரைந்தனர். விமானத்தில் இருந்த பயணிகளை அவசரமாக இறக்கப்பட்டனர்.

    விமானத்தின் முன் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என கூறப்பட்டுள்ளது.

    சேதமடைந்த ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் விமானத்தை சரிசெய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #BhopalAirport #planeskidsonrunway
    ×