என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரண்டாவது படம்"

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தை ரிலீஸ் செய்ய பயங்கரமான நாளை தேர்ந்தெடுத்திருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #TamizhPadam2 #TP2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் படம் `தமிழ்படம் 2'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை ரிலீஸ் குறித்து படக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. 

    இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் அவரது டுவிட்டர் பக்கத்தில் `ஜூலை 13-ஆம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது, அந்த தேதியில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள்'. என்று குறிப்பிட்டிருக்கிறார். 



    இதில் இருந்து படத்தை ஜுலை 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் வெளியான படத்தில் டீசர், நேற்று வெளியான பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #TamizhPadam2 #TP2

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #TamizhPadam2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `தமிழ்படம் 2'. ரசிகர்களை கவர படம் குறித்த புதுப்புது அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வரும் படக்குழு, சினிமா, அரசியல் என பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது.

    சமீபத்தில் படத்தில் இருந்து நான் யாருமில்ல என்ற சிங்கள் டிராக் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த சிங்கிள் டிராக்கை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தில் இடம்பெறும் பாடல் லிஸ்ட்டையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 
    இந்த படத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TamizhPadam2

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தின் அடுத்த பாடல் மற்றும் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #TamizhPadam2 #TP2
    தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `தமிழ்படம் 2'. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். 

    ரசிகர்களை கவர படம் குறித்த புதுப்புது அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வரும் படக்குழு, சினிமா, அரசியல் என பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து போஸ்டர்களை வெளியிகிறது. 

    இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தில் இருந்து இரண்டாவது பாடல் மற்றும் 17-வது போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் அறிவித்திருக்கிறார்.
    இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TamizhPadam2 #TP2

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழ்ப்படம் 2.0 படத்தின் தலைப்பை படக்குழு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. #TP2Point0 #TamizhPadam2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2.0' படத்தின் தலைப்பை `தமிழ்படம் 2' என மாற்றிவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

    `ஜுரோவிற்கு மதிப்பில்லை என்பதால், தலைப்பில் இருந்து ஜுரோவை மட்டும் நீக்குகிறோம். எனவே படத்தின் தலைப்பு இனிமேல் தமிழ்ப்படம் 2 என்றே அழைக்கப்படும்' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    சமீபத்தில் வெளியாகிய படத்தின் டீசர் மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமா மற்றும் சினிமா அல்லாது நடக்கும் அட்ராசிட்டிகளையும் படக்குழு அவ்வப்போது கலாய்த்து புகைப்படங்களை வெளியிடுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. 

    சமீபத்தில் படத் தயாரிப்பாளர் சசிகாந்த், தலையில் கைவைத்தபடி குணிந்து உட்கார்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர் அமுதன், தமிழ்ப்படம் 2 படம் பார்த்த தயாரிப்பாளரின் மனநிலை இது என்றும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதில் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TP2Point0 #TamizhPadam2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2.0' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #TP2Point0 #TamizhPadam2
    தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான `தமிழ் படம்' படத்தின் இரண்டாவது பாகம் `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. 

    சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    சிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 



    ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த பாகம் ஒரு போலீஸ் அத்தியாயமாக உருவாகி இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. படம் விரைவில் வெளியாக இருக்கிறது. #TP2Point0 #TamizhPadam2

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2.0' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #TP2Point0 #TamizhPadam2
    தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான `தமிழ் படம்' படத்தின் அடுத்த பாகம் `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இந்த படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை (நாளை) வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    படம் மே 25-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக ரஜினியின் 2.0 படத்தை கிண்டல் செய்யும்படியாக படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 



    சிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த பாகம் ஒரு போலீஸ் அத்தியாயமாக உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. #TP2Point0 #TamizhPadam2

    ×