என் மலர்

  சினிமா

  ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - தமிழ்ப்படம் 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
  X

  ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - தமிழ்ப்படம் 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #TamizhPadam2
  சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `தமிழ்படம் 2'. ரசிகர்களை கவர படம் குறித்த புதுப்புது அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வரும் படக்குழு, சினிமா, அரசியல் என பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது.

  சமீபத்தில் படத்தில் இருந்து நான் யாருமில்ல என்ற சிங்கள் டிராக் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த சிங்கிள் டிராக்கை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தில் இடம்பெறும் பாடல் லிஸ்ட்டையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 
  இந்த படத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

  படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TamizhPadam2

  Next Story
  ×