என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் தேர்வு பயிற்சி மையங்கள்"

    நீட் தேர்விற்கான பயிற்சி 412 மையங்களில் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #NEETExam #Sengottaiyan
    சென்னை:

    எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாஸ்காம் பவுண்டே‌ஷன் இணைந்து பொது நூலக இயக்க மண்டல மாநாடு சென்னை தரமணியில் இன்று நடத்தியது.

    இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விரைவில் ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்கப்படும். 13 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் உள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களிலும் கொண்டு வரப்படும்.


    நீட் தேர்விற்கான பயிற்சி மையங்கள் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும். 412 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும்.

    கீழடி அகழ்வாராய்ச்சி பணி நிறைவடைந்த பிறகு அந்த பொருட்களை காட்சிபடுத்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா போல அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.

    கடந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டதால் போதிய மருத்துவ இடம் தமிழ்வழி மாணவர்களுக்கு கிடைக்கவில்லை.

    ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நீட் பயிற்சி அளிப்பதால் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #NEETExam #TNMinister #Sengottaiyan
    ×