என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டக் படகு"

    அமெரிக்காவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்களில் ஒன்றான பிரான்சன் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #US #BoatAccident
    நியூயார்க்:

    அமெரிக்காவின் மிசவ்ரி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளம் பிரான்சன். குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் குடும்பத்துடன் செல்லும் அழகிய இடங்களில் இதுவும் ஒன்று.

    இங்குள்ள ஏரியில் டக் படகு எனப்படும் தரையிலும் தண்ணீரிலும் செல்லக்கூடிய படகு மூலம் சவாரி செய்வது பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்நிலையில், டக் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு ஏரியில் மூழ்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மேலும், 4 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 14 பேர் விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    படகு சவாரியின் போது திடீரென அதிகப்படியான காற்று வீசியதால் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும், மீட்கப்பட்டவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த டக் படகு சவாரியில் இதற்கு முன்னதாக 2 முறை விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #US #BoatAccident
    ×