என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம்"

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #KarunanidhiUnwell #KauveryHospital
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமானதையடுத்து காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து வருகின்றனர்.



    அவ்வகையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கருணாநிதியின் உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் நேரில் கேட்டறிந்தனர்.

    இதேபோல் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், இன்று மதியம் காவேரி மருத்துவமனைக்கு வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்

    இதற்கிடையே கருணாநிதி விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதி ஒரு பிறவி போராளி என்றும், நிச்சயம் அவர் மீண்டெழுந்து விரைவில் உடல்நலம் பெறுவார் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து உழைப்பை வித்திட்டவர் கருணாநிதி என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வேண்டும் என்பதே அதிமுகவின் விருப்பம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.  #KarunanidhiHealth #KarunanidhiUnwell #KauveryHospital
     
    ×