என் மலர்
நீங்கள் தேடியது "நண்பர்கள் தினம்"
- இதயம் முரளி டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
- இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், படம் "இதயம் முரளி".
படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது.
இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இன்று உலக நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இதயம் முரளி படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
- ஜொமோட்டோ நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி தீபேந்தர் கோயல் புதுமையான முறையில் கொண்டாடி உள்ளார்.
- பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நண்பர்கள் தினத்தை ஒவ்வொருவரும் வித்தியாசமாக கொண்டாடிய நிலையில், ஜொமோட்டோ நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி தீபேந்தர் கோயல் புதுமையான முறையில் கொண்டாடி உள்ளார்.
அதாவது தனது நிறுவனத்தின் 'டி-சர்ட்டை' அணிந்து கொண்டு அவர் தனது பைக்கில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வினியோகம் செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் தனது நிறுவன ஊழியர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கும் நண்பர்கள் தினத்தையொட்டி அது தொடர்பான வாசகங்கள் இடம் பெற்றிருக்கும் ரப்பர் பிரேஸ்லெட் வழங்கி மகிழ்வித்தார். அவரது இந்த பதிவு டுவிட்டரில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.






