என் மலர்
நீங்கள் தேடியது "ஓட்டல் சாப்பாடு"
- வீட்டில் சமைப்பவர், 'உடம்புக்கு நல்லது' என்று நினைப்பார்.
- வீட்டில் சமைக்கப்படும் உணவின் பின்னால் இருக்கும் உழைப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.
'அம்மா சாப்பாடு நல்லாதான் இருக்கு... ஆனா ஓட்டல் மாதிரி இல்ல!' - இந்தக் குரல் இன்று பல வீடுகளில் அடிக்கடி ஒலிக்கிறது. வீட்டை விட, ஓட்டலில் சாப்பிட அனேகம் பேருக்கு பிடிக்கிறது, ருசியாக இருப்பதாக தோன்றுகிறது. இது ஏன்?
இதற்கு காரணம், 'சுவை' என்பது நாக்கில் மட்டும் இல்லை.
அது மணம், தோற்றம், சூழல், மனநிலை, எதிர்பார்ப்பு ஆகிய அனைத்தின் கூட்டுத்தொகை. வீட்டில் தினமும் அதே சமையலறை, அதே பாத்திரம், அதே நபர் சமைக்கும் உணவு நமக்கு 'பழக்கம்' ஆகிவிடுகிறது. பழக்கம் வந்த இடத்தில் புதுமை குறையும்; புதுமை குறைந்த இடத்தில் சுவை மங்குவது போல தோன்றும்.
ஆனால் உணவகங்களில்?
புதுமை. புதிய இடம். வேறு கைகள். வேறு வாசனை. வேறு பரிமாறும் முறை. இதுவே உணவின் சுவையை இரட்டிப்பாக்குகிறது.
பொதுவாக, உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகளில், வீட்டைவிட அதிக அளவில் உப்பு, எண்ணெய், வெண்ணெய், நெய், சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. காரணம் ஒன்றுதான், வாடிக்கையாளரின் நாக்கை வசப்படுத்த வேண்டும்.
வீட்டில் சமைப்பவர், 'உடம்புக்கு நல்லது' என்று நினைப்பார். ஓட்டலில் சமைப்பவர், 'மீண்டும் வர வைக்க வேண்டும்' என்று நினைப்பார்.
இந்த இரண்டு எண்ணங்களின் இடைவெளிதான், சுவையின் இடைவெளியாக நமக்கு தெரிகிறது.
வீட்டில் சாப்பிடும்போது, வேலைப்பளு, குடும்பப் பிரச்சனை, பணச்சுமை, நாளைய பொறுப்புகள் எல்லாமே நம்முடன் மேசைக்கு வந்து உட்காரும்.
உணவகத்திலோ, 'இன்று சாப்பிட வந்திருக்கோம்' என்ற மனநிலை.
சமைக்கவில்லை. பாத்திரம் கழுவ வேண்டாம். யாருக்கும் பரிமாற வேண்டாம். இந்த மனஅழுத்தமற்ற நிலை, உணவின் சுவையை கூடுதலாக்குகிறது.
வீட்டில் சமைக்கப்படும் உணவின் பின்னால் இருக்கும் உழைப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. தினமும் சமைக்கும் கைகளின் மதிப்பு, அன்றாடமாகி விட்டதால் சாதாரணமாகிவிடுகிறது. ஆனால் ஓட்டலில் பணம்
கொடுத்து வாங்கும் உணவு, 'விலை' காரணமாகவே நமக்கு உயர்ந்ததாக தோன்றுகிறது.
பணம் கொடுத்தால் சுவை கூடும் என்ற மனநிலை, அறியாமலே நம்முள் உருவாகிவிட்டது.
அழகான தட்டு, கவரும் உள்அலங்காரம், சூடான பரிமாற்றம், உணவுகளுக்கு கவர்ச்சியான பெயர்கள் இவை அனைத்தும் உணவின் சுவைக்கு முன் நம் மனதை தயார் செய்கின்றன.
வீட்டில்?
'சாப்பாடு ரெடி... வாங்க!'
அவ்வளவுதான்.
அன்பு இருந்தாலும், அங்கு ஒரு 'நிகழ்வு' இல்லை. நிகழ்வு இல்லாத இடத்தில் சுவை நினைவாக மாறுவதில்லை.
இன்றைய தலைமுறை, வெளியே சாப்பிடுவதை ஒரு அனுபவமாக பார்க்கிறது. செல்பி, சமூக ஊடகப் பதிவு, நண்பர்கள், சிரிப்பு இவை அனைத்தும் உணவுடன் சேர்ந்து ஒரு நினைவாக உருவாகின்றன. வீட்டுச் சாப்பாடு அந்தப் போட்டியில் பின்னடைகிறது.
உணவக சுவை நாக்குக்கு இனிமை.
வீட்டுச் சாப்பாடு உடலுக்கு நன்மை.
வீட்டுச் சாப்பாடு சுவையில்லை என்று நாம் சொல்வது, உணவின் குறை அல்ல; நமது பார்வையின் குறை.
அதை தினசரி என்று எடுத்துக்கொள்ளாமல், அன்பின் வெளிப்பாடாக பார்த்தால், அதில் இருக்கும் சுவையும் நமக்குத் தெரியும்.
இந்தோனேசியாவில் அச்சே என்ற மாகாணம் உள்ளது. இங்கு ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்த மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உறவினர் அல்லாத ஆண்-பெண் ஒன்றாக அமரக்கூடாது. திருமணமாகாத பெண்கள் மற்ற ஆண்களுடன் சுற்றக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன.
இப்போது பிர்யூன் மாவட்டத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டங்களை மீறினாலும், தற்போது வரை கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பது இல்லை. ஆனால் இனி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று மாகாண அரசு அறிவித்துள்ளது. #Acehprovince






