என் மலர்
நீங்கள் தேடியது "இடத்தகராறு"
பெரியகுளம் அருகே இடப்பிரச்சினையில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
தேனி:
பெரியகுளம் அருகில் உள்ள டி.கல்லுப்பட்டி நேருஜிநகரை சேர்ந்தவர் ராஜாமணி (வயது45). இவர் வீடு கட்டும் பணிக்காக ஜல்லி கற்களை குவித்து வைத்திருந்தார். இவரது வீட்டிற்கு எதிரில் வசிக்கும் முனியாண்டி என்பவர் எதற்காக இங்கே ஜல்லி கற்களை கொட்டி வைத்துள்ளாய்? என கேட்டார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முனியாண்டி கத்தியால் ராஜாமணியை குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த ராஜாமணி கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இது குறித்து அவரது மகன் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர்.






