என் மலர்
நீங்கள் தேடியது "ஹாங்காங் பேட்மிண்டன்"
- இந்திய வீரரான லக்சயா சென், சீன தைபேயின் சவுடியென்-சென் உடன் மோதினார்.
- இறுதிப்போட்டியில் சீனாவின் லி ஷிபெங் உடன் லக்சயா மோத உள்ளார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஹூங் ஹோம்பேயில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான லக்சயா சென், தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சவுடியென்-சென் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்சயா சென் 23-21 மற்றும் 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர் இறுதிப்போட்டியில் சீனாவின் லி ஷிபெங் உடன் மோத உள்ளார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து, தென்கொரியாவின் சங் ஜி ஹூயனிடம் தோற்று வெளியேறினார். #HongKongOpen #PVSindhu #Srikanth
கோவ்லூன்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 18-21, 30-29, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பிரனாயை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா, சீனாவின் சென் லாங்கை சந்திக்க இருந்தார். காயம் காரணமாக சென் லாங் போட்டியில் இருந்து விலகியதால் சமீர் வர்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கால்இறுதிக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 24-26, 20-22 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் சங் ஜி ஹூயனிடம் தோற்று வெளியேறினார். சங் ஜி ஹூயனிடம் சிந்து தோற்பது இது 6-வது முறையாகும். #HongKongOpen #PVSindhu #Srikanth