என் மலர்
விளையாட்டு

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லக்சயா சென்
- இந்திய வீரரான லக்சயா சென், சீன தைபேயின் சவுடியென்-சென் உடன் மோதினார்.
- இறுதிப்போட்டியில் சீனாவின் லி ஷிபெங் உடன் லக்சயா மோத உள்ளார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஹூங் ஹோம்பேயில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான லக்சயா சென், தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சவுடியென்-சென் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்சயா சென் 23-21 மற்றும் 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர் இறுதிப்போட்டியில் சீனாவின் லி ஷிபெங் உடன் மோத உள்ளார்.
Next Story






