என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக திட்டங்கள்"
தமிழக பாஜகவினரிடையே வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களில் அதிக மக்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #BJP #PMModi #TNBJP
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாஜக தொண்டர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி வருகிறார்.
இந்நிலையில், தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்கில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டங்களில் அதிகளவில் மக்களை இணைக்க வேண்டும்.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 70 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 47 லட்சம் கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. இதன்மூலம் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலையை அடைந்துள்ளது.
மத்திய அரசின் திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் 4 லட்சம் இளைஞர்களும், வங்கிக்கடன்கள் மூலம் பல லட்சக்கணக்கானவர்களும் பலனடைந்து உள்ளனர். சாகர்மாலா திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 3 துறைமுகங்கல் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். #BJP #PMModi #TNBJP






