என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரெம்ளின் மாளிகை"

    உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷிய அதிபர் புதின் செல்போன் உபயோகிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலை கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார். #VladimirPutin #Smartphone #Kremlin
    மாஸ்கோ:

    உலகமெங்கும் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. அடுத்த ஆண்டு உலகளவில் செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 468 கோடியை எட்டி விடும், 2020-ம் ஆண்டு 478 கோடி ஆகிவிடும் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

    ஆனால் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷிய அதிபர் புதின் செல்போன் உபயோகிக்கவில்லை. அவரிடம் செல்போன் கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை கிரெம்ளின் மாளிகை (அதிபர் மாளிகை) செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார்.

    “அப்படியென்றால் அதிபர் புதின் தகவல்களை எப்படி பெறுகிறார்?” என்று ரஷியா 24 டெலிவிஷன் சேனல் நிருபர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அவர் பதில் அளிக்கையில், “ஒரே ஒரு தகவல் ஆதாரத்தையோ, ஊடக செய்தியையோ மட்டும் நம்பி இருக்கக்கூடாது என்பது அதிபர் புதினுக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம்” என்றார்.

    மேலும், “நாளிதழ் செய்தி சுருக்கங்கள், டி.வி. செய்திகளின் சுருக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அவர் தகவல்களை பெற்றுக்கொள்கிறார். கம்ப்யூட்டரில் அதிபர் தனிப்பட்ட முறையில் இணையதளங்களை பார்த்துக்கொள்கிறார். எனக்கு தெரிந்தவரையில் அவரிடம் செல்போன் கிடையாது” என கூறினார். #VladimirPutin #Smartphone #Kremlin 
    ×